கொழும்பு - கல்கிசையில் காணாமல் போயிருந்த மாணவன் வீடு திரும்பினார்!
கொழும்பு - கல்கிசை பகுதியில் காணாமல் போனதாக கூறப்படும் பாடசாலை மாணவன் வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாணவன் இன்று மாலை வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், குறித்த மாணவன் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். குறித்த மாணவர் வீடு திரும்புவதற்கு முன்னர் வேறு இடமொன்றில் தங்கியிருந்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அவர் யாருடன் எங்கு தங்கியிருந்தார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவன் நேற்று முதல் காணாமல் போயிருந்த நிலையில், அவரது பெற்றோர்கள் கல்கிசை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் காணாமல் போன பிரபல பாடசாலை மாணவன்! - பொலிஸார் வெளியிட்ட தகவல்
கொழும்பு - கல்கிசை பகுதியில் காணாமல் போன பாடசாலை மாணவனை தேடும் பணியில் நான்கு சிறப்பு குழுக்கள் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த மாணவன் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் பொலிஸாருக்கு தெரிவிக்குமாறு பொது மக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு - பம்பலப்பிட்டியிலுள்ள பிரபல பாடசாலையில் க.பொ.த சாதாரணதரத்தில் கல்வி கற்கும் மாணவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறினார். “கல்கிசை பிரதேச புலனாய்வு பிரிவு, கல்கிசை பிரதேச குற்ற புலனாய்வு பிரிவு, குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகம் மற்றும் கல்கிசை பொலிஸ் குற்றப்பிரிவு ஆகியவை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன.
இந்த விசாரணை தொடர்பாக தற்போது சுமார் 8 அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்படி 6.33 முதல் 6.35 வரை, கடைசி சிசிடிவி கெமராக்கள் அவர் காலி வீதியில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு பயணிப்பதைக் காட்டுகின்றன.
அதன் பின்னர் அவர் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
எனவே அந்த கடைசி காட்சிக்குப் பிறகு அவருக்கு என்ன ஆனது என்று பொலிஸார் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.
எந்தவொரு காரணத்திற்காகவும் இது குறித்த இறுதி முடிவுக்கு நாம் வர முடியாது. இது ஒரு குற்றமா அல்லது அவர் எங்காவது சென்றாரா என்பதை தீர்மானிக்க முடியாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 15 மணி நேரம் முன்
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan