மணற்காட்டில் காணாமல் போன கடற்றொழிலாளரின் குடும்பத்தினரை சந்தித்த பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர்
யாழ். வடமராட்ச கிழக்கு மணற்காட்டில் காணாமல் போன கடற்றொழிலாளரின் குடும்பத்தை பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ்குமார் நேற்று (27) நேரில் சந்தித்தார்.
நேற்று முன்தினம் (26) கட்டுமரம் மூலம் மணற்காட்டு கடலில் கடற்றொழில் ஈடுபட்டு கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை பயணித்த கட்டுமரம் மீட்கப்பட்டும் குறித்த கடற்றொழிலாளர் கரை திரும்பவில்லை.
இந்நிலையில், காணாமல் போனவரை தேடும் பணி இரண்டாவது நாளாக நேற்றும் முன்னெடுக்கப்பட்டது.
கடல் தண்ணீர் தெளிவின்மை காரணமாக சுழியோடிகளால் காணாமல் போன கடற்றொழிலாளரை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து தேடுதல் பணி இடம்பெற்றுவருவதால் சம்பவ இடத்திற்கு சென்ற பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் கடற்றொழிலாளரின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இருக்கும் பிரச்சனையில் பழைய வில்லன் என்ட்ரி, நந்தினி, ரேணுகா எப்படி சமாளிக்க போகிறார்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam