கொழும்பின் புறநகர் பகுதியில் நடந்த அதிசயம்
கொழும்பின் புறநகர் பகுதியான ஜா-எல பகுதியில் கிளிகளின் செயற்பாடு பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கம்பியில் சிக்கி கீழே விழுந்த கிளி ஒன்று கூண்டிற்குள் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அதனை ஏனைய கிளிகள் காப்பாற்றி சென்ற அபூர்வ சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சுதந்திர தினத்தன்று கிளிகள் கூட்டம் ஒன்று அடைக்கப்பட்டிருந்த கூண்டினை திறந்து குறித்த கிளியை விடுவித்துள்ளது.
கிளி கூட்டத்தை விரட்ட சென்ற வீட்டு உரிமையாளர் ஒருவரை கிளி கொத்தி காயப்படுத்திவிட்டு அங்கிருந்து அழைத்து சென்றுள்ளனர்.
ஜாஎல பட்டகம பிரதேசத்தில் வயல் ஒன்றில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் காயப்பட்ட கிளியை அந்த பகுதி நபர் ஒருவர் கூட்டில் அடைத்து வைத்துள்ளார்.
அந்த கிளியை விடுவிக்க அடிக்கடி அங்கு கிளிகள் கூட்டமாக வந்து முயற்சித்துள்ளது. எனினும் முடியாமல் போயுள்ளது.
இந்த நிலையில் சுதந்திர தினத்தன்று கிளிகள் தங்கள் சொண்டுகளை பயன்படுத்தி கூட்டில் இருந்த கிளியை காப்பாற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தன்று இந்த கிளிக்கும் சுதந்திரம் கிடைத்ததாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
கிட்டத்தட்ட 20 கிளிகள் இவ்வாறு குறித்த கிளியை காப்பாற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.
அந்த நடவடிக்கையை தடுக்க வந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் மிகவும் கோபமாக கிளிகள் செயற்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.



