அரிசியின் சில்லறை விலையில் கட்டுப்பாட்டு முறையை கொண்டுவர வர்த்தக அமைச்சு கவனம்
அரிசியின் விலையைக் குறைவாகப் பேணும் முயற்சியாக, அரிசியின் சில்லறை விலையில் கட்டுப்பாட்டு முறையைக் கொண்டுவர வர்த்தக அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
இதன்படி, நாடு, சிவப்பு பச்சை, சம்பா மற்றும் கீரி சம்பா ஆகிய நான்கு வகைகளுக்கு அதிகபட்ச சில்லறை விலையை அமுல்படுத்தும் வகையில் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, அடுத்த அமைச்சரவையில் ஒப்புதலைக் கோரவுள்ளார்.
தேவையான கணக்கீடுகள் செய்யப்பட்ட பின்னர் அரிசியின் கட்டுப்பாட்டு விலையைக் குறிப்பிட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்று அமைச்சர் குணவர்தன தெரிவித்துள்ளார்.
விலைக் கட்டுப்பாட்டு வர்த்தமானியை மீறாத வகையில் விலைக் கட்டுப்பாட்டை மீறும் வர்த்தகர்களுக்கு 100,000 ரூபா அபராதம் விதிக்கவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அரிசி வர்த்தகர்களை அரிசியை அதிக விலைக்கு விற்க, அரிசி ஆலை உரிமையாளர்கள், கட்டாயப்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் அபராதத்தின் ஒரு பகுதியை ஆலை விநியோகஸ்தர்களுக்கு விதிக்கும் யோசனையும் ஆராயப்படுகிறது.
தேவை ஏற்பட்டால் கோதுமை மா, சர்க்கரை மற்றும் கோழி போன்றவற்றுக்கும் இதேபோன்ற விலைக் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று நம்புவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
எனினும் அரசாங்கம் முன்னர் அரிசி மீது விலைக் கட்டுப்பாட்டு முறையை விதித்தபோது, வர்த்தகர்கள் அரிசியைப் பதுக்கி வைக்கவும், கையிருப்புகளை அதிக விலைக்கு விற்கவும் ஆரம்பித்தனர்.
இதன் காரணமாக, அரசாங்கம் தாம் வெளியிட்ட விலைக்கட்டுப்பாட்டு வர்த்தமானியைத் தாமே ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதற்கிடையில், அடுத்த சில மாதங்களில் அரிசி விநியோகத்தில் எதிர்பார்க்கப்படும் பற்றாக்குறையைச் சந்திக்க, 100,000 மெட்ரிக் தொன் அரிசிக்கான கேள்விப்பத்திரம் கோரப்பட்டுள்ளது.





கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல சீரியல் நடிகர்கள்... எந்த ஜோடி பாருங்க Cineulagam

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam
