குறைந்த விலையில் முட்டைகளை கொள்வனவு செய்த அமைச்சர்
கொழும்பு மற்றும் கம்பஹாவில் 55 ரூபாவுக்கு முட்டை விற்பனை செய்யும் திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் கமத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர குறைந்த விலையில் முட்டைகளை கொள்வனவு செய்துள்ளார்.
சந்தையில் 65 ரூபா முதல் 70 ரூபாவுக்கு விற்கப்படும் முட்டை

சந்தையில் ஒரு முட்டை 65 ரூபா முதல் 70 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதை கவனத்தில் கொண்டு நுகர்வோருக்கு 55 ரூபாவுக்கு முட்டை விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு அமைச்சர் மகிந்த அமரவீரவின் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனடிப்படையில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் சில இடங்களில் முட்டை விற்பனை செய்யும் வேலைத்திட்டம் இன்று கமத்தொழில் அமைச்சில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
30 ஆம் திகதி காலி மற்றும் கண்டியில் முட்டை விற்பனை

அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம், 10 சுமை ஊர்திகளில் 10 இடங்களில் நான்கு லட்சம் முட்டைகளை விற்பனை செய்ய எதிப்பார்த்துள்ளது. இதனை தவிர இந்த மாதம் 30 ஆம் திகதி காலி மற்றும் கண்டியில் நகர பிரதேசங்களில் முட்டை விற்பனை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri