சீமெந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் குற்றச்சாட்டு
சீமெந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் விவகார அமைச்சர் லசந்த அழகியவன்ன(Lasantha Alagiyawanna) குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டின் 25 மாவட்டங்களிலும் சீமெந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதனை தடுக்கும் நோக்கில் சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் விநியோகஸ்தர்கள் சிறிய வர்த்தகர்களுக்கு சீமெந்து விற்பனை செய்து வந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தற்பொழுது விநியோகஸ்தகர்களும் சில்லறை விலைக்கு சீமெந்து விற்பனை செய்வதாகத் தெரிவித்துள்ளார்.
சீமெந்து பையில் குறிப்பிடப்பட்டுள்ள விலைக்கு கூடுதலாக விற்பனை செய்யப்படுகின்றதா என்பதனை கண்காணிப்பு செய்யும் நோக்கில் இந்த சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
சில இடங்களில் வரையறுக்கப்பட்ட அளவு சீமெந்து மட்டுமே விற்பனை செய்யப்படுவதாகவும், சில இடங்களில் ஒரு மூடை சீமெந்து 1200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
100 கோடி மரணங்களை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது: AI தொடர்பில் பில் கேட்ஸின் எச்சரிக்கை News Lankasri