குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 25 ரூபாய்?
தற்போதைய நிலையில் போக்குவரத்து துறையின் அனைத்து செலவுகளையும் கருத்திற்கொண்டு பேருந்து கட்டணங்களை அதிகரிப்பதற்கான தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.
இந்தத் தகவலை அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் தெரிவித்துள்ளார்.
டயர், பட்டரி, எரிப்பொருள், ஒயில், மேலதிக பாகங்கள் மற்றும் சேவை கட்டணங்கள் வேகமாக உயர்வதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தங்கள் கோரிக்கை நாளை மறுதினம் உத்தியோகபூர்வமாக அரசாங்கத்திடம் முன்வைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேருந்துக்கான குறைந்தபட்ச கட்டணமாக அறிவிடப்படும் 14 ரூபாவை 25 ரூபாவாக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
போர் நடந்தால் டிரம்பிற்கு இது பாடமாக இருக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை News Lankasri
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam