பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி! பங்கேற்றவர்களை புகைப்படம் எடுத்த இராணுவத்தினர்
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி இன்று நான்காவது நாளாகவும் எழுச்சியாக நடைபெற்று நிறைவு பெற்றுள்ளது.
கிளிநொச்சி - கரடிப்போக்குச் சந்தியில் பொத்துவில் - பொலிகண்டி பேரணியின் நான்காம் நாள் நிகழ்வுகள் நிறைவுக்கு வந்துள்ளது.
பேரணியின் ஆரம்ப நாள் முதல் இன்று வரை இராணுவத்தினர் மற்றும் கடும்போக்கு சிங்கள மக்களால் பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட நிலையிலும் அதனை முறியடித்த பேரணி இலக்கு எல்லையை அண்மித்துள்ளது.
இன்றைய தினம் வவுனியாவில் மன்னார் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பேரணியை இராணுவத்தினர் புகைப்படம் எடுத்துள்ளனர்.
பேரணியில் கலந்து கொண்டவர்களை அச்சுறுத்தும் வகையில் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்ட போதும், தடைகளை தாண்டி நான்காம் நாள் நிறைவுக்கு வந்துள்ளது.








ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
