மருந்துப் பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை - விசேட வர்த்தமானி வெளியானது
43 வகையான மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ சாதனங்களின் விலைகள் தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளது.
மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ சாதனங்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயம் செய்து இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவினால் இந்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டு 5ம் இலக்க தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபை சட்டத்தின் கீழ் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இரத்தத்தில் சீனியின் அளவை அளவீடு செய்யும் கருவி உள்ளிட்ட சில மருத்துவ சாதனங்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கான உச்சபட்ச சில்லறை விலை இந்த வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.