ஈஸ்டர் தாக்குதலின் உண்மையை மறைக்கும் ஊடகங்கள்:பேராயர் குற்றச்சாட்டு
நாட்டின் சில ஊடகங்கள் ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலின் உண்மையை மக்களுக்கு வெளியிடுவதில்லை என கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை (Cardinal Malcolm Ranjith) குற்றம் சுமத்தியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் இருக்கும் மறைக்கப்பட்ட உண்மையை ஊடகங்கள் நாட்டுக்கு வெளியிட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். சில ஊடகங்கள் அரசியல்வாதிகளுக்கு தேவையான விதத்தில் தமது ஊடகங்களை கையாண்டு வருகின்றன.
எவ்வாறாயினும் ஈஸ்டர் தாக்குதலின் உண்மை வெளிவரும் நாளில் இநத ஊடகங்கள் அழிந்து போகும் எனவும் பேராயர் குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வார இறுதியில் கருத்து வெளியிடும் போதே பேராயர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.





கரூரில் 41 பேர் மரணம்.. 34 மணி நேரத்துக்கு பின் வீட்டை விட்டு வெளியே வந்த விஜய்..எங்கு செல்கிறார்? Cineulagam

மறைந்த ரோபோ ஷங்கர் குடும்பம் பட்ட கஷ்டம்.. மாதம் இவ்வளவு லட்சம் EMI கட்டவேண்டுமா? வெளிவந்த உண்மை Cineulagam
