சித்தங்கேணி இளைஞன் விவகாரம்: நீதி கோரி போராட்டத்தில் குதித்த மக்கள் (Video)
வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த நாகராசா
அலெக்ஸிற்கு நீதி கோரி கண்டனப் போராட்டமொன்று
முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டமானது வட்டுக்கோட்டை சந்தியில் இன்று (03.12.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதன் போது பொலிஸார் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் குவிக்கப்பட்டு போராட்டகாரர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டள்ளதாகவும் கூறப்படுகிறது.

வெளியாகியுள்ள சா.தரப் பரீட்சை பெறுபேறுகள் : பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள மாணவி விதுர்ஷாவின் நெகிழ்ச்சி பதிவு
சட்ட விரோத சித்திரவதைகள்
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டைச் சந்தியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் உயிரிழந்த இளைஞனுக்கு அஞ்சலி செலுத்தி போராட்டம் ஆரம்பமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞனுக்கு மரணத்துக்கு நீதி கோரியும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தொடர்ச்சியாக அரங்கேற்றப்பட்டு வரும் சட்ட விரோத சித்திரவதைகளை நிறுத்தக் கோரியும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன்,பொது மக்கள் என பலரும் ஈடுபட்டுவருகின்றனர்.
போராட்டம் நிறைவுபெறும் தறுவாயில் காங்கேசன்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்
தலைமையிலான பொலிஸார் கலந்துரையாட முன்வந்தபோதும் போராட்டகாரர்கள் கலைந்து
சென்றுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |















ட்ரம்ப் அழுத்தத்தால் ஐரோப்பியம் ஒன்றியம் எடுக்கவிருக்கும் அதிரடி முடிவு: ரஷ்யாவிற்கு பின்னடைவு News Lankasri

பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
