கிறிஸ்மஸ் காலப்பகுதியில் பிரித்தானியா மக்கள் எதிர்நோக்கவுள்ள பாரிய சிக்கல்! வெளியான அறிவிப்பு
பிரித்தானியா முழுவதிலும் உள்ள டெஸ்கோ விநியோக மையங்களில் தொழிலாளர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு டெஸ்கோ விநியோக மையங்களில் 1,200 தொழிலாளர்கள் வரை இவ்வாறு பகிஷ்கரிப்பு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல்பொருள் அங்காடிகளில் 4 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த வேலை நிறுத்த போராட்டமானது கிறிஸ்மஸ் பண்டிகை காலப்பகுதியில் சில பொருட்களின் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என்றும் யுனைட் பொதுச்செயலாளர் ஷரோன் கிரஹாம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், பல்பொருள் அங்காடிகள், ஏற்கனவே விநியோகச் சங்கிலி சிக்கல்களுக்கு மத்தியில் தங்களுக்குத் தேவையானவற்றைப் பெற போராடி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.