பாகிஸ்தானில் இடம்பெற்ற இந்த படுகொலையானது மிக மோசமான கொடூரச் செயலாகும் : ஜீ.எல்.பீரிஸ் (VIDEO)
பாகிஸ்தானில் இடம்பெற்ற இந்த படுகொலையானது மிக மோசமான கொடூரச் செயலாகும் என அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் (G. L. Peiris) தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திபொன்றிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இந்த செயலை முழு அரசாங்கமும், முழு பாகிஸ்தான் மக்களும் இந்த கொலையை கண்டிப்பதாக பாகிஸ்தானிய பிரதமர் மற்றும்வெளிவிவகார அமைச்சு எமக்கு அறிவித்துள்ளது.
பிரியந்த குமார 11 வருடங்கள் பாகிஸ்தானில் பணியாற்றி வந்துள்ளதுடன், கடந்த 9 வருடங்களாக அவர் படுகொலை செய்யப்பட்ட சியால்கோட் நகரிலேயே வசித்து வந்துள்ளார்.
அவருக்கு எதிராக எந்தவொரு குற்றச்சாட்டும், முறைப்பாடுகளும் பதிவாகியிருக்கவில்லை அத்துடன், எந்தவொரு ஒரு கடவுளுக்கு எதிராக எவ்வித கருத்துக்களையும் அவர் வெளியிட்டிருக்கவில்லை அவ்வாறு குறிப்பிடுவது பொய்யான குற்றச்சாட்டாகும்.
இந்த கொலையுடன் தொடர்புடைய அனைவருக்கும் எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பாகிஸ்தானிய அரசு தெரிவித்துள்ளது.
அவர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளதுடன், உடனடியாக 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 120 பேரில் 13 பேர் மிக முக்கிய சந்தேகநபர்கள் எனவும் அவர்களுக்கு எதிராக சட்டத்தின் ஊடாக கொடுக்கககூடிய உச்ச தண்டனை வழங்கப்படும் எனவும் பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் தன்னிடம் தொலைபேசி ஊடாக உறுதியளித்துள்ளனர் என ஜி.எல்.பீரிஸ் இதன்போது தெரிவித்துள்ளார்.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
