தமிழ் மக்கள் சார்ந்த எந்தவிதமான தீர்வினையும் சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்: வீ.ஆனந்த சங்கரி (video)

Ranil Wickremesinghe Sri Lanka Politician President of Sri lanka
By Kajinthan 2 மாதங்கள் முன்

”தேர்தலில் மக்கள் ஆணையைப் பெற முடியாது எனவும் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்படும் தமிழ் மக்கள் சார்ந்த எந்தவிதமான தீர்வினையும் சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்” என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளரின் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் நேற்று (03.12.2022) இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகியமை சட்டவிரோதமானதாகவே பார்க்கிறேன்.


அரசியல் தீர்வு

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைக்கு செல்லவுள்ளதாக அறிகின்றேன்.

கடந்த 2004ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க சமஷ்டிக் கோரிக்கையுடன் ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கிய போது தமிழ் மக்களை வாக்களிக்க விடாது தடுத்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு.

அந்தத் தேர்தலில் வெறும் தசம் மூன்று வாக்குகளில் ரணில் விக்ரமசிங்க தோற்றுப் போக ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச தெரிவானார்.

தமிழ் மக்கள் சார்ந்த எந்தவிதமான தீர்வினையும் சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்: வீ.ஆனந்த சங்கரி (video) | The Mandate People Cannot Be Obtained Elections

இப்போது மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு சார்ந்து பேச்சு வார்த்தைக்கு செல்ல போவது அரசியல் இராஜதந்திரமாக என்ற கேள்வியை கேட்க விரும்புகிறேன்.

சமஷ்டி

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் கட்சிகள் பேச்சுவார்த்தை மட்டும் இராஜ தந்திரம் என நினைப்பது தமிழ் மக்களை மீண்டும் ஏமாற்றும் ஒரு நாடகமாகும்.

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசுவது பிழையல்ல ஆனால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பேசி சமஷ்டியைப் பெற முடியாது.

தற்போதைய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைக் கொண்டிராத ரணில் விக்ரமசிங்க வழங்கப் போகும் தீர்வினை நாடாளுமன்றத்தில் உள்ள பெரும்பாலானவர்கள் ஏற்கவே மாட்டார்கள்.

ஏனெனில் நாடாளுமன்றத்தில் உள்ள அநேகமானவர்கள் தமிழ் மக்களுக்கு சமஷ்டித் தீர்வு கிடைக்கக் கூடாதென்ற நிலைப்பாட்டில் உள்ள நிலையில் ரணில் விக்ரமசிங்க வரும் பேச்சு வார்த்தை என்ற போர்வையில் சர்வதேசத்தை ஏமாற்ற தமிழ் தலைமைகள் தமிழ் மக்களை ஏமாற்றப் போகிறார்கள்.

இறுதி யுத்தம் 

கடந்த 2008 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் இடப்பெற்றுக் கொண்டிருந்தபோது பலமான ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச இருந்தார்.

அக்காலப் பகுதியில் யுத்தத்தை நிறுத்துவோம் என்னுடன் சேர்ந்து வாருங்கள் ஜனாதிபதியுடன் பேசுவோம் என கேட்டபோது தமிழ் தலைமைகள் அதற்கு விரும்பவில்லை என்னைத் துரோகி என்னப் பட்டம் சூட்டினர்.

தமிழ் மக்கள் சார்ந்த எந்தவிதமான தீர்வினையும் சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்: வீ.ஆனந்த சங்கரி (video) | The Mandate People Cannot Be Obtained Elections

தமிழ் தேசியக் கூட்டமைப்பு விக்னேஸ்வரன் உட்பட தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பில் பேசும்போது யாருடன் பேசப்போகிறோம் எதைப் பேசப் போகிறோம் ரணில் விக்ரமசிங்கவினால் தர முடியுமா அல்லது அதனைப் பெற்றுக் கொள்வதற்கு ஏதேனும் வழிகள் உள்ளதா என்பது தொடர்பில் ஆராய்வதே இராஜதந்திரம்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு இந்தியாவின் கைகளிலே தங்கி உள்ளது தமிழ் தலைமைகள் எந்த ஜனாதிபதியுடன் பேசியும் இறுதியில் இந்தியாவே தீர்மானிக்கும்.

ஆகவே அதனை விடுத்து ஜனாதிபதி அழைத்தார் நாம் வருகிறோம் என எடுத்த எடுப்பில் பேச்சுவார்த்தைக்கு ஓடுவது தமிழ் மக்களுக்கு தீர்வாகாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு

05 Feb, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளம், கொக்காவில் வீதி

05 Feb, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

02 Feb, 2023
மரண அறிவித்தல்

Anaipanthy, சுண்டுக்குழி, சென்னை, India, Staten Island, United States

30 Jan, 2023
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, Wentworthville, Australia

03 Feb, 2023
மரண அறிவித்தல்

வேலணை பள்ளம்புலம், வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

03 Feb, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Stouffville, Canada

05 Feb, 2023
நன்றி நவிலல்

திருநகர், உரும்பிராய் வடக்கு

08 Jan, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, அனலைதீவு 1ம் வட்டாரம், கனடா, Canada

06 Feb, 2021
நன்றி நவிலல்

கல்வியங்காடு, London, United Kingdom

05 Jan, 2023
நன்றி நவிலல்

ஆனைப்பந்தி, Vaudreuil, Canada

06 Jan, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி தெற்கு, London, United Kingdom

28 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Toronto, Canada

06 Feb, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Düsseldorf, Germany

27 Jan, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுவைதீவு, உருத்திரபுரம், Basel, Switzerland

06 Feb, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Feb, 2013
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Montreal, Canada, Brampton, Canada, Ontario, Canada

05 Jan, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

01 Feb, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், பிரான்ஸ், France

19 Jan, 2022
நன்றி நவிலல்

நயினாதீவு 1ம் வட்டாரம்,, Scarborough, Canada

10 Jan, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியபுளியங்குளம், ஈச்சங்குளம், வைரவபுளியங்குளம்

05 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Guelph, Canada

06 Feb, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, மல்லாகம், மெல்போன், Australia

05 Feb, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, வவுனியா

06 Feb, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Montreuil, France

06 Feb, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், திருகோணமலை

03 Feb, 2023
மரண அறிவித்தல்

கரம்பொன், Saint-Ouen-l'Aumône, France

01 Feb, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Norbury, United Kingdom

05 Feb, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, உரும்பிராய் கிழக்கு, தெஹிவளை, Sutton, United Kingdom

05 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

05 Feb, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, மெல்போன், Australia

03 Feb, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா

04 Feb, 2018
மரண அறிவித்தல்

மீசாலை வடக்கு, அல்லைப்பிட்டி, கொழும்பு, La Chaux-de-Fonds, Switzerland

03 Feb, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சுவிஸ், Switzerland

29 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, Noisy-le-Grand, France

01 Feb, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில்

03 Feb, 2016
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US