20 மூடை உரத்தை திருடியவர் வசமாகச் சிக்கினார்
கண்டி - புஸ்ஸல்லாவை யட்டகம பிரதேசத்திலுள்ள தென்னந்தோப்பில் வைக்கப்பட்டிருந்த 20 மூடை யூரியா உரத்தைத் திருடிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புஸ்ஸல்லாவை யட்டகம பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 20 மூடை உரம், கடந்த 25ஆம் திகதி இரவு திருடப்பட்டது என வெயாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில், இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், சந்தேகத்துக்கிடமான ஒருவரின் வீட்டைச் சுற்றிவளைத்ததுடன் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது, சந்தேக நபர் உரத்தைத் திருடியமை உறுதிப்படுத்தப்பட்டதுடன் திருடிய உரத்தைச் சிறிய ரக லொறியில் அநுராதபுரத்துக்குக் கொண்டு சென்று 50 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
உரத்தைக் கொண்டு செல்வதற்காகப் பயன்படுத்திய லொறியையும் 50 ஆயிரம் ரூபா
பணத்தையும் கைப்பற்றியுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
