பெண்களை மூன்று லட்சம் ரூபாவுக்கு கோடிஸ்வர்களுக்கு வழங்கி வந்த நபர்!
கோடிஸ்வர வியாபாரிகள் மற்றும் செல்வந்தர்களுக்கு பெண்களை விநியோகிக்கும் வர்த்தகம் குறித்து பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
அந்தரங்க செயற்பாடுகளுக்காக இவ்வாறு பெண்கள் விநியோகிக்கப்படுவதாக தெரியவருகிறது.
இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய நபரை பொலிஸ் திணைக்களத்தின் சிறுவர்கள் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகள் கல்கிஸ்சை பிரதேசத்தில் கைது செய்துள்ளனர்.
21 வயதான யுவதியை அனுராதபுரத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு வழங்க தயாராக இருந்த போதே இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நபர் மோல்டா என்ற பெயரில் பிரதேசத்தில் பிரபலமானவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த யுவதி புற்று நோயால் பாதிக்கப்பட்டவர் என தெரியவருகிறது.
இந்த யுவதியை பணம் கொடுத்து வாங்க முயற்சித்த நபர், பொலன்நறுவை பிரதேசத்தில் பிரதேச சபைகளில் நிர்மாணிப்பு பணிகளுக்கு பொறுப்பான செல்வந்த வியாபாரி என தெரியவந்துள்ளது.
இதற்கு முன்னர் 15 வயதான கன்னிப் பெண்ணான யுவதியை இந்த வியாபாரிக்கு இந்த நபர் விற்பனை செய்துள்ளதாகவும் இந்த யுவதி 3 லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதேபோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மேற்கூறிய யுவதியை இந்த நபர் 3 லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய தயாராகி வந்துள்ளார்.
யுவதியை விலைக்கு வாங்க தயாரான வியாபாரியின் அலைபேசியை பொலிஸார் கைப்பற்றி ஆராய்ந்துள்ளனர். யுவதியை இந்த வியாபாரி கடந்த வாரம் விலைக்கு வாங்க தயாராக இருந்தமை இதன் மூலம் தெரியவந்துள்ளது.
இதனை தவிர கோடிஸ்வர வர்த்தகர்களுக்கு கன்னிப் பெண்களை தேடி வழங்கும் போது, அவர்களின் கன்னித்தன்மை உறுதிப்படுத்தும் மருத்துவச் சான்றிதழ்களை மோல்டா என்ற இந்த சந்தேக நபர் வழ்ஙகியுள்ளதாக தெரியவந்துள்ளதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
சந்தேக நபர், இளம் யுவதிகளை தன்வசம் வைத்துக்கொண்டு அவர்களை பாலியல் தொழில் ஈடுபடுத்தி வந்த முன்னணியில் இருக்கும் விபாச்சார வியாபாரி எனவும் தெரியவந்துள்ளது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இந்த புகைப்படத்தில் விஜய்யுடன் இருக்கும் பிரபல நடிகர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? இதோ பாருங்க Cineulagam

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
