புத்தசாசன அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை
அமைச்சரவையில் சமர்பிக்கப்படவிருக்கும் திரிபீடகத்தினை பாதுகாப்பதற்கான சட்டமூலம் மற்றும் பெளத்த இதிகாச நூல்களை பாதுகாப்பதற்கான திருத்தச் சட்டமூலம் ஆகியவற்றை தயாரிக்குமாறும் புத்தசாசன அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர்களை இன்று (20.05.2023) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்துள்ளார்.
பௌத்த விகாரைகள் தேவாலகம் கட்டளைச் சட்டம்
பௌத்த விகாரைகள் தேவாலகம் கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான தேரவாத கலந்துரையாடல் ஒன்றை ஏற்படுத்துவதற்கான திருத்தச் சட்டமூலம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களது ஆசீர்வாதம் பெறுவதற்காக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜப்பானுக்கான தனது அடுத்த விஜயத்தின் போது தேரவாத பௌத்தம் தொடர்பில் ஆராய்வதற்கான பல்கலைக்கழகம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு அவசியமான உதவிகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் இன்று அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர்களை சந்தித்த போது ஜனாதிபதி தெரிவித்துளளார்.




