எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பினை முற்றுகையிடவுள்ள முக்கிய தரப்பினர்
மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களுக்கு நீண்டகாலமாக நியமனம் வழங்கப்படாதுள்ளமையை கண்டித்து எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
மத்திய மாகாண ஆளுநரின் தன்னிச்சையான தீர்மானங்கள் காரணமாகவே குறித்த நியமனம் இதுவரை வழங்கப்படாதுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், மத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுகின்ற போதிலும், இந்த ஆசிரியர் உதவியாளர்களுக்கான நியமனங்கள் இதுவரை வழங்கப்படாதுள்ளது.
இந்தநிலையில், அரசாங்கத்தினால் உடனடியாக அவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri