கடன் கொடுத்த நாடுகளின் வசமாகும் இலங்கையின் நிலப்பரப்புக்கள்!

UNP Sri lanka World Ranil wickramasinghe Ruwan Wijewardena
By Benat Dec 27, 2021 08:47 AM GMT
Report

நாட்டில் தற்போதிருக்கும் நிலைமை தொடருமாயின் கடன் பெற்ற அனைத்து நாடுகளுக்கும் இலங்கையிலுள்ள நிலப்பரப்புக்களை வழங்க வேண்டிய நிலை ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின்  பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

சிறிகொத்தவில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அவர் இதனை குறிப்பிட்டார். 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

நைஜீரியாவிலிருந்து கடன் அடிப்படையில் மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்யவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த கடனை மீள செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டால் நாட்டிலுள்ள முக்கிய நிலப்பரப்புகளை நைஜீரியாவிற்கு விற்க வேண்டியேற்படும்.

நாட்டில் தற்போது காணப்படும் டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச தொடர்புகள் உள்ள ஒருவரால் மாத்திரமே முடியும். இலங்கையில் அவ்வாறு சர்வதேச தொடர்புகள் காணப்படும் ஒரேயொரு தலைவர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே ஆவார்.

எனவே ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் மாத்திரமே தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

2015 இல் நாம் ஆட்சியைக் கைப்பற்றிய போது எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டன. நாம் மீண்டும் ஆட்சியை ஒப்படைக்கும் போது பெற்றோர் லீற்றரின் விலை 132 ரூபாவாகக் காணப்பட்டது. எனினும் தற்போது 177 ரூபா வரை அதிகரித்துள்ளது.

அன்று எமது எரிபொருள் விலை சூத்திரத்தை விமர்சித்தவர்களே இன்று அதனை பாராட்டுகின்றனர். எரிபொருள் விலை சூத்திரம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இன்று பெற்றோல் விலை 130 - 140 ரூபாவாகவே காணப்பட்டிருக்கும்.

கோவிட் பரவல் ஆரம்பித்த காலப்பகுதியில் உலக சந்தையில் எரிபொருள் விலை சடுதியாக வீழ்ச்சியடைந்தது. எனினும் அந்த சலுகையை மக்களுக்கு வழங்காத அரசாங்கம் , நிதியமொன்றை நிறுவி அதன் மூலம் கிடைக்கப்பெறும் இலாபத்தை உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கும் போது வழங்குவதாக குறிப்பிட்டது.

எனினும் அந்த நிதியத்திற்கும் , அதனால் கிடைக்கப் பெற்ற இலாபத்திற்கும் என்னவானது என்பது இது வரையில் அறிவிக்கப்படவில்லை.

2001 இல் வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரத்தை ரணில் விக்கிரமசிங்கவே மீள கட்டியெழுப்பினார்.

அவர் அதனை செயலால் நிரூபித்த தலைவராவார். அவரது தலைமையில் உருவாகக் கூடிய அரசாங்கத்திற்கு மாத்திரமே இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்  என குறிப்பிட்டுள்ளார்.   

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US