மூன்று வருடங்களில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தயாராகும் கோட்டாபய! (photo's)
போலி தகவல்களுக்கு ஏமாறாமல் விரைவில் பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம தொடக்கம் குருநாகல் வரையான பகுதியை நேற்று திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இந்த மாதிரியான ஒரு நோய்த் தொற்று உலகம் முழுவதும் பரவும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளிலேயே தினசரி மில்லியன் கணக்கான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.
எனினும் நாங்கள் முதலாவது நாளில் இருந்தே சரியான முறையில் நடவடிக்கைகளை கையாண்டமையினால் நாட்டை திறந்துள்ளோம். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகைத்தருகின்றார்கள். பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.
சரியான முறையில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றது. அனைவரும் பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுங்கள் போலித்த தகவல்களை நம்பி தடுப்பூசிகளை தவிர்க்க வேண்டாம்.
பொய்யான பிரசாரங்களுக்கு ஏமாறாமல் இந்த மூன்று வருடங்களில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கைகோர்க்குமாறு அரசாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளிடம் ஜனாதிபதி இதன் போது வேண்டுகோள் விடுத்தார்.









