அமைச்சர் விமலின் பொறுப்பிலிருந்த முக்கிய நிறுவனம் பறிப்பு!
அமைச்சர் விமல் வீரவன்ஸவின் பொறுப்பிலிருந்த லங்கா பொஸ்பேட் நிறுவன லிமிட்டட் ஆனது அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் கீழ் அரசிதழில் கொண்டு வரப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் அமுலுக்கு வரும் வகையில், தொழிற்துறை அமைச்சு, விவசாய அமைச்சின் கீழிருந்த இயக்கங்கள், பொறுப்புகள், நிறுவகங்களைத் திருத்தும் புதிய அரசிதழ் அறிவிப்பு ஒன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்துள்ளார்.
இது குறித்து நாவலபிட்டியில் வைத்து ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, லங்கா பொஸ்பேட் கடந்த காலத்தில் விவசாயத் துறையின் கீழ் இருந்தது என்பதே அதற்குக் காரணம் என்று நான் நினைக்கின்றேன்.
விவசாய துறை சார்பில் அரசாங்கம் ஒரு பாரிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
பொஸ்பேட் உற்பத்தி மிகவும் மதிப்புமிக்கது.விவசாய அமைச்சகம் நாட்டில் பொஸ்பேட் உற்பத்தியை அந்த அனைத்து வேலைகளையும் கொண்டு தொடங்கும் ”என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
