அமெரிக்காவில் மஹாத்மா காந்தியின் சிலை சேதப்பட்டுள்ளது- விசாரணையை வலியுறுத்தும் இந்தியா!
அமெரிக்காவில் மஹாத்மா காந்தியின் சிலை நேற்று முன்தினம் சேதப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு இந்திய தூதரகம், அமெரிக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரம் மன்ஹாட்டன் பகுதியில் அமைந்திருக்கும் யூனியன் சதுக்கத்தில், மகாத்மா காந்தியின் 8 அடி உயர முழு உருவ வெண்கல சிலை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இந்த சிலையை நேற்று சிலர் சேதப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் இந்த சம்பவத்துக்கு அங்குள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் கோரியுள்ளது. தற்செயலாக இந்த சிலை 2001ஆம் ஆண்டு அகற்றப்பட்டது.
எனினும் பின்னர் அது 2002ஆம் ஆண்டு மீண்டும் அதே இடத்தில் ஸ்தாபிக்கப்பட்டது.
மஹாத்மா காந்தியின் 117ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, 1986ஆம் ஆண்டு இந்த சிலை நிறுவப்பட்டது.



