ராஜபக்சக்களின் சொகுசு வாழ்க்கை! நெருக்கடிக்குள்ளாகியுள்ள முக்கிய துறைகள்
ராஜபக்சக்கள் சொகுசு வாழ்க்கை வாழும் போது அப்பாவி மக்கள் மீது வரிச் சுமையை சுமத்துவது நியாயமற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் கப்ரால், பிபி.ஜயசுந்தர ஆகியோரின் தவறான பொருளாதார தீர்மானங்களால் நாடு வங்குரோத்து நிலையை அடைந்தது.
நாட்டை விட்டு முற்றாக சென்றுள்ளனர்

வைத்தியர்கள், விசேட வைத்தியர்கள் உள்ளிட்டோர் நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர். வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியில் செல்வதால் இலவச சுகாதார சேவை பாரிய நெருக்கடிக்குள் உள்ளாகின்றது.
தகவல் தொழிநுட்பத் துறையில் 30 வீதமானோர் கடந்த இரு ஆண்டுகளுக்குள் நாட்டை விட்டு முற்றாக சென்றுள்ளனர். கட்டுமாணத் தொழிற்துறை வீழ்ச்சியடைந்துள்ளது. பொறியியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள், அறிவார்ந்தவர்கள் நாட்டை விட்டு வெளியேறினால், நாடு படித்த மனிதவளமற்ற பாலைவனம் போல மாறிவிடும்.
எரிபொருள், மின்கட்டணம் உள்ளிட்ட சேவைக் கட்டணம் தாங்கிக்கொள்ள முடியாத வகையில் உயர்ந்துள்ளது. உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்படாத நிலையில் தேசிய மட்டத்தில் எரிபொருளின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எரிபொருளின் விலை அதிகரிப்பு ஏனைய சேவைத் துறைகளின் விலை அதிகரிப்பை தீர்மானிக்கும்.
வரிக்கொள்கையை அரசாங்கம் மாற்றியமைக்க வேண்டும். இல்லாவிட்டால் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்கள் மேலும் தீவிரமடையும் என குறிப்பிட்டார்.
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri