இலங்கையில் விடுதலைப்புலிகளின் அச்சம்! சரத் வீரசேகர
இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அச்சம் இன்னமும் நீங்கவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளை மீளுருவாக்கம் முயற்சியில் புலத்திலுள்ள முன்னாள் உறுப்பினர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கு இங்கிருக்கும் சிலர் துணைபோகின்றனர்.
குறிப்பாக வடக்கு, கிழக்கு இளைஞர்கள் சிலர் நாட்டின் சட்டதிட்டங்களை அறியாது தாம் நினைத்தபடி செயற்படுகின்றனர். அவ்வாறானவர்களைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் அடையாளம் கண்டு கைது செய்து வருகின்றனர்.
தமிழீழ விடுதலைப்புலிகளை மீளுருவாக்கும் முயற்சிகளுக்குத் துணைபோகின்றவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும்.
நாட்டில் இன்னொரு இரத்த ஆறு வேண்டாம். வடக்கு, கிழக்கு இளைஞர்களே பொறுப்புணர்வுடன் செயற்படுங்கள். உங்கள் இளமைக்காலம் பொன்னானது. அதைச் சுதந்திரமாகக் கழியுங்கள். அதைவிடுத்து பயங்கரவாதச் செயல்களுக்குத் துணைபோய் சிறைகளில் உங்கள் இளமைக்காலத்தைக் கழிக்க வேண்டாம் என்றார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan