கோவிட் தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் கிளிநொச்சியில் ஆரம்பம் - பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி
மாவட்டத்தில் கோவிட் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வரும் நிலையில் 65000 தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் இன்று கிளிநொச்சியில் ஆரம்பமானது எனப் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி சரவணபவன் தெரிவித்துள்ளார்.
இன்று காலை முதல் இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பமாகியதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி சரவணபவன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அதற்கு அமைவாக இரண்டாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள கீழ்வரும் தடுப்பூசி நிலையங்களில் பணிகள் இடம்பெற்று வருகின்றது. அருகில் உள்ள நிலையத்துக்குச் சென்று மக்கள் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம், புனித திரேசா பெண்கள் கல்லூரி, உருத்திரபுரம் ஆரம்ப வைத்தியசாலை, வட்டக்கச்சி மத்திய கல்லூரி, அக்கராயன் மகாவித்தியாலயம், பாரதிபுரம் மகாவித்தியாலயம், புன்னை நீராவி அ.த.க. பாடசாலை, பிரமந்தனாறு கிராம சேவையாளர் அலுவலகம், தர்மபுரம் மத்திய கல்லூரி, கல்மடுநகர் அ.த.க. பாடசாலை, முருகானந்தா அ.த.க. பாடசாலை, பரந்தன் கிராம சேவையாளர் அலுவலகம், முழங்காவில் வைத்தியசாலை, பூநகரி வைத்தியசாலை, வேவில் வைத்தியசாலை, பளை மத்திய கல்லூரி ஆகிய தடுப்பூசி நிலையங்களில் பொதுமக்கள் தடுப்பூசிகளைச் செலுத்திக்கொள்ளலாம்.
தடுப்பூசி செலுத்தச் செல்வோர் தடுப்பூசி அட்டைகளை எடுத்துச் செல்ல வேண்டும். தற்பொழுது படிப்படியாகப் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வருவதாகவும், மக்கள் இதுவரை ஒத்துழைப்பு வழங்கியது போன்று தொடர்ந்தும் வழங்கினால் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது ஊசி பெற்றுக்கொள்ளும் அதேவேளை, முதல் ஊசி பெறாதவர்களும் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவர் குறிப்பிட்டதுடன், நடமாடும் தடுப்பூசி ஏற்றும் பணிகளும் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.











ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan

வாட்டர் மெலன் திவாகர் முதல் அகோரி கலையரசன் வரை.. பிக் பாஸ் 9ல் நுழைத்த 20 போட்டியாளர்கள் முழு லிஸ்ட் இதோ Cineulagam

அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri
