ரிஷாத் வீட்டில் மர்மமாக உயிரிழந்த சிறுமி! சடலத்தை தோண்டுவதற்கு பகிரங்க கோரிக்கை
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமி தொடர்பில் எந்தவித அழுத்தங்களுக்கும் இடம் கொடுக்காமல் விசாரணையை மேற்கொள்ளுமாறு தமிழ் முற்போக்கு கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், இஷாலினியின் சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு புதிய சட்ட வைத்திய விசாரணை அறிக்கை பெறப்பட வேண்டும் எனவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்களான பழனி திகாம்பரம் , வேலுகுமார் மற்றும் உதயகுமார் ஆகியோர் கொழும்பு சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபர் தேசபந்து தென்னகோனை இன்று சந்தித்துள்ளனர்.
சம்பவம் குறித்த விசாரணையில் பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த பாலசூரியவின் நடவடிக்கையில் வெளிப்படை தன்மை இல்லை எனவும், அவரை அகற்றுமாறு அவரிடம் வலியுறுத்தப்பட்டதாக மனோ கணேசன் தனது முகப்புத்தகத்தில் கூறியுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
