மக்களின் தலையெழுத்தை மக்களே தீர்மானிக்க வேண்டும்!
மக்களின் தலையெழுத்தை மக்களே தீர்மானிக்க வேண்டும் எனவும் அந்த தீர்மானத்தை எடுக்க உதவ முடியாத அரசாங்கம் இருக்குமாயின், அப்படியான அரசாங்கம் பதவி விலக வேண்டும் என ராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
காலியில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கத்தில் தமது பொறுப்பை நிறைவேற்ற முடியாத அமைச்சர்கள் இருப்பார்கள் என்றால், அவர்கள் பதவி விலக வேண்டும்.
இது மிகவும் ஆபத்தான சந்தர்ப்பம். இந்த ஆபத்தான சந்தர்ப்பத்தில் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டிருக்காது அனைவரும் இணைந்து செயற்பட வேண்டியது முக்கியம்.
மக்கள் உயிர் பாதுகாப்பை எண்ணி மரண பயத்தில் உள்ளனர். அப்படியான மனிதர்கள் ஏன் நாம் மேலும் மேலும் மரண பயத்தை நோக்கி தள்ள வேண்டும்?.
அப்படி செய்வது சரியல்ல. அரசாங்கம் என்ற வகையில் மக்களின் மரண பயத்தை போக்க முடிய வேண்டும் மரண பயத்தை போக்கி, தொற்று நோயை முற்றாக நாட்டில் இருந்து ஒழிக்க வேண்டும்.
அத்துடன் தொற்று நோயை முற்றாக ஒழிக்க முடியாது. எமது நாடு மட்டுமல்ல முழு உலகமும் தொற்று நோயால் பீடிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தை மீண்டும் திறப்பதன் மூலம் தொற்று நோய் நாட்டுக்குள் வர வாய்ப்புள்ளது. அனைத்திற்கு தயாரான வேலைத்திட்டம் எமக்கு இருக்க வேண்டும்.
சரியான முகாமைத்துவம் இருக்க வேண்டும். வைத்தியசாலைகளில் இருந்து கிடைக்கும் தகவல்களின்படி கொரோனா நோயாளிகள் அதிகரித்துள்ளனர் எனவும் விதுர விக்ரமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா




