தையிட்டி காணி அளவீடு இடைநிறுத்திற்கான காரணத்தை வெளியிட்ட அதிகாரிகள்

Colombo Jaffna Sri Lankan Peoples Nothern Province Srilankan Tamil News
By Theepan Apr 29, 2026 11:13 AM GMT
Report

காணி அளவீடு தொடர்பான நீண்டகாலப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர நாம் முனைப்புடன் செயற்பட்ட போதும், கடிதத் தலைப்பு இல்லை  என்ற ஒரு சிறிய விடயத்துக்காக காணி உரிமையாளர்கள் அளவீட்டுப் பணிக்குச் சம்மதிக்காமை மிகுந்த கவலையளிக்கின்றது என யாழ். மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

தையிட்டியில் நேற்று(28.04.2026) காணி அளவீட்டுப் பணிகள் இரண்டாவது முறையாகவும் தடைப்பட்டமை குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு பல்கலைக்கழக மாணவனால் நேர்ந்த கதி

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு பல்கலைக்கழக மாணவனால் நேர்ந்த கதி

உரிமையாளர்களின் கோரிக்கை மறுப்பு

கொழும்பிலிருந்து வருகை தந்த புத்தசாசன அமைச்சின் அதிகாரிகள், நில அளவைத் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட அதிகாரிகள் என அனைவரும் தையிட்டி திஸ்ஸ விகாரையைச் சூழவுள்ள காணிகளை அளவீடு செய்வதற்காக காலை 8 மணி முதல் காத்திருந்தோம்.

தையிட்டி காணி அளவீடு இடைநிறுத்திற்கான காரணத்தை வெளியிட்ட அதிகாரிகள் | The Letter Heading Must Be Changed Pradeeban

“காணிகளை விடுவிக்கும் நோக்குடனேயே அளவீடு செய்கின்றோம்” என எழுத்து மூல கடிதம் வேண்டும் என உரிமையாளர்கள் கேட்டுக் கொண்டனர்.

அதற்கமைய, "பொதுமக்களின் காணிகளை அளவீடு செய்து உரிமையாளர்களிடம் கையளிக்கும் நோக்கில் காணி அளவீடு செய்யப்படுகின்றது" எனும் தலைப்பில், அரச அதிகாரிகள் மற்றும் வலிகாமம் வடக்கு தவிசாளர் உட்பட 7 பேரின் கையொப்பம் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலாளரின் உத்தியோகபூர்வ முத்திரை அடங்கிய கடிதத்தை நாம் வழங்கினோம்.

எனினும், குறித்த கடிதத்தை ஒரு குறிப்பிட்ட அரச நிறுவனத்தின் கடிதத் தலைப்பில் தருமாறு காணி உரிமையாளர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.


ஒரு நிறுவனத்தின் கடிதத் தலைப்புக்குள் ஏனைய திணைக்கள அதிகாரிகள் கையெழுத்திட முடியாது என்ற நடைமுறைச் சிக்கலை நாம் விளக்கியும் அவர்கள் அதனை ஏற்க மறுத்துவிட்டனர். உரிமையாளர்கள் பொருத்தமான காரணத்தைக் கேட்டிருந்தால் பரிசீலித்திருக்கலாம்.

ஆனால், வேறொரு நிறுவனத்தின் கடிதத் தலைப்பில் கையொப்பமிட்டுத் தருமாறு கோருவது நியாயமற்றது. இந்த விடயங்கள் அனைத்தும் அறிக்கையாகக் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன.

தையிட்டி விகாரை விவகாரங்களைக் கையாளும் விசேட குழு இது குறித்து அடுத்தகட்ட முடிவை எடுக்கும் என்றார். 

மேலதிக தகவல் - ராகேஷ்

GalleryGalleryGalleryGalleryGallery
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US