நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தை விட முன்னிலை வகிக்கும் எதிர்க்கட்சி
ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தை விட எதிர்க்கட்சிகள் சிறப்பாக செயற்பட்டுள்ளன.
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஒரு வருடம் கடந்த ஓகஸ்ட் மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், மிகவும் சிறப்பாக செயற்பட்ட பத்து உறுப்பினர்களை அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று தரப்படுத்தியுள்ளது.
வெரைட் ரிசர்ச் நடத்தும் manthri.lk இணையத்தளம் வெளியிட்டுள்ள சிறப்பாக செயற்பட்ட 10 பேரில் ஐந்து பேர் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நான்கு பிரதிநிதிகளும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் இதில் இடம்பிடித்துள்ளனர்.
பத்து பேரில் புத்திக பத்திரன முதலிடத்தைப் பிடித்துள்ளார். நாடாளுமன்ற வருகை, நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்று கருத்து வெளியிடல் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளுக்கு அமைய Manthri.lk இன் கணிப்பை மேற்கொள்கின்றது.
இந்த அனைத்து உறுப்பினர்களும் நாடாளுமன்றத்திற்கு வருகைத் தருவது மாத்திரமல்லாது, அவர்கள் 100 முறைக்கு மேல் நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்றுள்ளதோடு, கருத்துகளுக்கு பங்களித்துள்ளார்கள்” என manthri.lk குறிப்பிட்டுள்ளது.


சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
