திருகோணமலை துறைமுகத்திற்கு வந்த மிகப் பெரிய கப்பல்
ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த 516 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிய MV Silver Spirit என்ற பயணிகள் போக்குவரத்து கப்பல் திருகோணமலை துறைமுகத்தின் அஷ்ரப் இறங்குதுறையை இன்று வந்தடைந்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளை ஏற்றிய கப்பலின் வருகையால் 21 லட்சம் ரூபா வருவாய்

அதிகளவான சுற்றுலாப் பயணிகளுடன் திருகோணமலை துறைமுகத்திற்கு வந்துள்ள மிகப் பெரிய கப்பல் இதுவென இலங்கை துறைமுக அதிகார சபையின் திருகோணமலை வதிவிட முகாமையாளர் சமன் பெரேரா தெரிவித்துள்ளார்.
MV Silver Spirit கப்பலில் வந்துள்ள சுற்றுலாப் பயணிகள், திருகோணமலை, சீகிரியா, தம்புள்ளை,அனுராதபுரம், பொலன்நறுவை ஆகிய இடங்களுக்கான ஒரு நாள் பயணத்தின் பின்னர் நியூசிலாந்து புறப்பட்டுச் செல்ல உள்ளனர்.

இந்த சுற்றுலாப் பயணிகள் கப்பலின் வருகையானது இலங்கை சுற்றுலா தொழிற்துறைக்கு மிகப் பெரிய ஊக்குவிப்பு எனவும் கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு வந்து, திரும்பிச் செல்லும் வரை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மூலம் துறைமுகத்திற்கு 21 லட்சம் ரூபா வருமானம் கிடைக்கும் எனவும் சமன் பெரேரா கூறியுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் வசூல் விவரம்.. 23 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் Cineulagam