லண்டன் இளைஞரின் கடத்தல் நாடகம்! - விசாரணையில் அம்பலமான உண்மை
லண்டனை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் தந்தையிடம் இருந்து பணம் பெற கடத்தல் நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“லண்டனைச் சேர்ந்த Sam Demilecamps, விடுமுறைக்காக இத்தாலி சென்றிருந்த போது,வடக்கு நகரமான மான்டே சான் கியுஸ்டோவில் வைத்து கடத்தப்பட்டதாகவும், அந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் எட்டு நாட்கள் சிறைபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
25 வயதான Sam Demilecamps சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு விடுவிக்கப்பட்டார். எனினும், இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்தி லண்டன் பொலிஸார் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை கண்டுப்பிடித்துள்ளனர்.
அக்டோபர் 13ம் திகதி, 6,000 பவுண்டுகள் தேவைப்படுவதாகவும் இல்லையேல் Sam Demilecamps அடுத்த நாள் இறந்துவிடுவார் என்றும் செல்வந்த தந்தைக்கு தொலைபேசி அழைப்பின் மூலம் தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து Sam Demilecamps சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் இத்தாலிய பொலிஸார் மீட்டனர். அதோடு, 3 ஆண்கள் மற்றும் ஒரு பெண் தன்னை கடத்தியதாக Sam Demilecamps கூறினார்.
தந்தைக்கு தகவல் வழங்கிய பின்னர், இத்தாலிய பொலிஸார் அவரை பட்டினி கிடந்து ரேடியேட்டரில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருப்பதைக் கண்டனர்.
Sam Demilecamps தந்தையின் 6,000 பவுண்டுகள் கேட்டுஅழைப்பைப் பெற்ற பின்னர், பொலிஸார் 36 மணி நேரத்திற்குள் அவரைக் கண்டுபிடித்து ஆயுதம் ஏந்திய சோதனையைத் தொடங்கினர்.
இதன்போது Sam Demilecamps ஒரு மேல் மாடியில் உள்ள இருண்ட அறையில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு வெறுங்காலுடன் இருப்பதைக் கண்டனர். இந்த சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
எவ்வாறாயினும், இந்த வழக்கை விசாரித்த பிரித்தானிய பொலிஸார் Sam Demilecamps தன் பெற்றோரிடம் பணம் வாங்கி கடனை அடைக்க நடத்திய நாடகம் என தெரியவந்தது” என்று கூறியது.