விமர்சையாக நடைபெற்ற கச்சதீவு அந்தோனியார் ஆலய உற்சவம்
திருச்சொரூப பவனி
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் திருச்சொரூப பவனி வெகுவிமர்சையாக இடம்பெற்றுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று(14) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
கொடியேற்றத்தை அடுத்து சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இடம்பெற்றுள்ளன.
சிலுவைப்பாதை
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் சிலுவைப்பாதை வெகுவிமர்சையாக இடம்பெற்றுள்ளது.
இத்திருவிழாவிற்கு இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து பெருமளவு பக்தர்கள் வருகை தந்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொடியேற்றம்
வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று(14) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
சிவகங்கை மறை மாவட்ட ஆயர் பேரருட்தந்தை லூர்து ஆனந் ஆண்டகை, யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார், நெடுந்தீவு பங்குத் தந்தை உள்ளிட்ட அருட்தந்தைகள், அருட்சகோதரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
இத்திருவிழாவிற்கு இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து பெருமளவு பக்தர்கள் வருகை தந்ததுடன் குறித்த நிகழ்வில் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டனர். திருப்பலி நிகழ்வு நாளை (15) காலை ஒப்புக்கொடுக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறும்.
இத்திருவிழாவில் பக்தர்களின் நலன் கருதி சுகாதார வசதிகள் போக்குவரத்து ஒழுங்குகள், உணவு வசதிகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டன.
திருவிழா ஆரம்பம்
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று ஆரம்பமாகியுள்ளது.
நாளை (15) காலை திருநாள் திருப்பலியுடன் இத்திருவிழா முடிவடையவுள்ளது.
வழமைபோல இந்த ஆண்டும் இந்திய மற்றும் இலங்கை பக்தர்கள் ஆயிரக்கணக்கில் இத்திருவிழாவில் பங்கேற்கவுள்ளனர்.
மொத்தம் 8,000 பக்தர்களும், சிவகங்கை மறைமாவட்ட ஆயருடன் இணைந்து 100 குருக்களும் இந்த யாத்திரையில் கலந்துகொள்ளவுள்ளனர்.

கொலைசெய்யாவிட்டால் கெட்ட வார்த்தைகளில் திட்டுவார்கள்: ஆயுதக் குழு உறுப்பினர் வழங்கும் பரபரப்பு வாக்குமூலம்!!
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பெரும் நெருக்கடியைச் சந்திக்கும் நாட்டின் பாதுகாப்பு 11 மணி நேரம் முன்

இளவரசர் வில்லியமை பிரிந்த நேரத்தில் கேட் கூறிய அந்த வார்த்தைகள்: வியப்படைந்த வில்லியமின் தோழி News Lankasri

Rasipalan: தலைவிதியேவே மாற்றப்போகும் சுக்ராதித்ய ராஜயோகம்- யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் பாருங்க Manithan
