ஐ.தே.கட்சியுடன் கூட்டணி வைக்க முயற்சித்த ஜே.வி.பி - புபுது ஜாகொட
கடந்த 2010 ஆம் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஒரு பட்டியலின் கீழ் போட்டியிடும் யோசனையை மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வந்ததாக முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட தகவல் வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடும் இந்த யோசனை மக்கள் விடுதலை முன்னணிக்குள் கருத்து முரண்பாடான கலந்துரையாடல்களை ஏற்படுத்தியது எனவும், இந்த யோசனையானது கட்சிக்குள் பாரதூரமான நெருக்கடிகளுக்கு காரணமாக அமைந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த யோசனையை கட்சிக்குள் கொண்டு வந்தவர்கள் மற்றும் அதற்கு ஆதரவளித்தவர்கள் இன்னும் மக்கள் விடுதலை முன்னணியில் இருக்கின்றனர்.
மேலும் சிலர் கட்சியில் இருந்து விலகி சென்றுள்ளனர். முன்னிலை சோசலிக் கட்சியில் தற்போது அங்கம் வகிக்கும் பிரதிநிதிகள், கொள்கை ரீதியான காரணத்திற்காக மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து விலகினர்.
மக்கள் விடுதலை முன்னணி முதலாளித்து அரசியல் கூட்டணிக்கு செல்லாது, சுயாதீனமாக தனது கொள்கைக்காக குரல் கொடுக்க வேண்டும் என்பதை கடுமையான நம்புவதாகவும் புபுது ஜாகொட குறிப்பிட்டுள்ளார்.
உயில் எடுக்க வீட்டிற்குள் நுழைந்த காட்சியை எப்படியெல்லாம் எடுத்துள்ளார்கள் பாருங்க.. அய்யனார் துணை படப்பிடிப்பு வீடியோ Cineulagam
வானதி சொன்ன விஷயத்தால் வீட்டைவிட்டு அனுப்பப்படுகிறாரா நிலா.. அய்யனார் துணை சீரியல் புதிய புரொமோ Cineulagam
பேசியே எதையும் சாதிக்கும் அசாத்திய பேச்சாற்றல் கொண்ட 3 ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan