நாடளாவிய ரீதியில் இன்று ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சை(Photos)
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது.
சுமார் 2438 பரீட்சை நிலையங்களில் உயர்தரப் பரிட்சை நடைபெறவுள்ளது.
இம்முறை பரீட்சையில் சுமார் மூன்று லட்சத்து நாற்பத்து ஐந்தாயிரத்து இருநூற்று நாற்பத்து இரண்டு பேர் இம்முறை பரீட்சைக்குத் தோற்ற உள்ளனர்.
இதில் இரண்டு லட்சத்து எழுபத்து ஒன்பதாயிரத்து நூற்று நாற்பத்து ஒரு பாடசாலை விண்ணப்பதாரிகள் உள்ளடங்குகின்றனர்.
கோவிட் தொற்றுக்கு இலக்கான மாணவர்களுக்காக மாவட்ட ரீதியில் 29 பரீட்சை மத்திய நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
கோவிட் நோய் அறிகுறிகள் தென்படும் மாணவ,மாணவியருக்கு பரீட்சை நிலையங்களில் தனியறை வசதி வழங்கப்பட வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பரீட்சை நடைபெறும் நாட்களில் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குமாறு இலங்கை மின்சார சபையிடம் கோரியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.