மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடையின் பின்னால் இருக்கும் சூட்சுமம்! - செய்திகளின் தொகுப்பு
நாட்டுக்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்ய டொலர் இல்லாத காரணத்தினால், அரசாங்கம் மாகாணங்களுக்கு இடையில் தொடர்ந்தும் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தி வருகிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன(Vajira Abeywardena) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். எரிபொருளை விநியோகிக்க முடியாத காரணத்தினால், மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எமக்கு உள்ளது.
நாடு முற்றாக திறக்கப்பட்டிருந்தால், தினமும் எரிபொருளுக்கு 10 மில்லியன் டொலர் தேவைப்படும். அப்படியானால் அரசாங்கத்திற்கு 10 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ளது.
டொலர் சாப்பிடுவதற்காகவா என பொதுமக்கள் கேட்கின்றனர். சீனிக்காக தினமும் ஒரு மில்லியன் டொலர் தேவைப்படுகிறது. இவற்றுக்கு டொலர்தான் தேவைப்படுகிறது. கோதுமை மாவுக்கு தினமும் ஒரு மில்லியன் டொலர் தேவை.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,