அடிப்படை அபிவிருத்தியை மையமாக நோக்கி நகரும் என்பிபி! சரோஜா சாவித்திரி
மக்களுடைய பௌதிக அபிவிருத்தி வாழ்வியல் அபிவிருத்தி சமுதாய அபிவிருத்தி என்பவற்றை இலக்காகக் கொண்டே எங்களுடைய அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம்(18) பிற்பகல் 2மணிக்கு கிளிநொச்சியில் நடைபெற்ற சிறுவர்தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசியல் பயண பாதை
தொடர்ந்து குறிப்பிடுகையில்
இதுவரை காலமும் பௌதீக அபிவிருத்தி என்பதை மாத்திரமே கருத்தில் கொள்ளப்பட்டது எங்களது அரசியல் பயண பாதையில் பௌதிக அபிவிருத்தியை மையப்படுத்திய அபிவிருத்திகளை தான் நாட்டின் நிரந்தர அபிவிருத்தி என்று கண்டு கொண்டிருந்தோம்.
ஆனால் அபிவிருத்தி என்பது அது மட்டுமல்ல நாங்கள் மாகாண சபைகளுக்கு நிதியை ஒதுக்கீடுகளை செய்யும் போது பாதைகள் செய்யப்பட்டது கட்டுமானங்கள் செய்து எவ்வாறு நடைபெற்றன என்றும் எவ்வாறு நிதி ஒதுக்கினோம் பௌதீக அபிவிருத்தி கட்டுமானங்களையும் பற்றி தான் நிறைய தடவை பேசி இருக்கின்றோம்.
ஆனால் மக்களுடைய வாழ்வியல் அபிவிருத்தி சமுதாய அபிவிருத்தி என்பனவற்றை கவனத்தில் எடுப்பதில்லை ஆனால் எங்களுடைய புதிய அரசாங்கம் அரசியல் அபிவிருத்தி சமூக அபிவிருத்தி வாழ்வியல் அபிவிருத்தி என்ற அடிப்படையிலே அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்து வருகின்றது.
இந்த அரசாங்கமானது சிறுவர் இல்லங்களில் தங்கி இருக்கின்ற சிறுவர்களுக்கு ஐயாயிரம் ரூபா நிதியை ஒதுக்கி அவர்களின் எதிர்கால செயல் திட்டங்களுக்காக அதேபோல சிறுவர் இல்லங்களில் இருந்து வெளியேறுகின்ற சிறுவர்களுக்கு வாழ்விட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் விதத்தில ஒரு மில்லியன் ரூபா செலவில் வீட்டத்திட்டங்கள் இந்த அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சிறுவர் தின நிகழ்வு
கிளிநொச்சியில் வடக்கு மாகாண நன்னடத்தைப் பாதுகாவல் மற்றும் சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்களத்தின் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு நேற்றையதினம்(18) நடைபெற்றுள்ளது.
கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் வடமாகாண நன்னடத்தை பாதுகாவல் மற்றும் சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் சுஜீவா சிவதாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் முன்னதாக விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு சிறுவர்கள் பராமரிப்புத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற கைத்தொழில் கண்காட்சிக்கூடம் திறந்து வைக்கப்பட்டதை தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் நடைபெற்றதுடன் சிறுவர் இல்லங்களில் கல்வி பயின்று பல்கலைக்கழகத்திற்கு தெளிவாகிய மாணவர்களுக்கான ஊக்குவிப்புத் தொகை சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.





தயார் நிலையில் இராணுவம்... ஜனாதிபதிக்கு எதிராக நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் மக்கள் News Lankasri
