இலங்கையர்களை கண்டு பிரமிக்கும் சுற்றுலா பயணிகள்! ஆஸ்திரிய இளைஞனின் நெகிழ்ச்சி
இலங்கையில் ஏற்பட்ட பேரிடரின் பின்னர் மக்களின் செயற்பாடு குறித்து ஆஸ்திரியா இளைஞன் ஒருவர் நெகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.
ஆஸ்திரியாவை சேர்ந்த டோபி என்பவர் நேற்றை இளைஞர் சேவை மன்றத்திற்கு சென்றிருந்த போது இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்கள் ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்வதனை பார்க்கும் போது மிகவும் பிரமிப்பதாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் மிகவும் நல்ல மனிதர்கள்
ஆஸ்திரியாவில் இதுபோன்றதொரு செயற்பாட்டை தான் கண்டதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மிகவும் நல்ல மனிதர்கள் உள்ளனர். இவ்வாறான ஒரு நெருக்கடியின் போதும் மக்கள் அடுத்தவருக்கு உதவுவதனை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.
நான் ஒரு சுற்றுலா பயணியாக இலங்கை வந்தேன். தற்போது நிவாரண பணிகளை பார்வையிட வந்தேன். ஆனாலும் மக்கள் இந்த புயலினால் அவதிப்படுவதனை ஊடகங்களில் பார்க்கும் மிகவும் வேதனையாக உள்ளது.
இப்படியான நிலையில் நான் சுற்றுலா மேற்கொள்ள நினைக்கவில்லை. இந்த மக்களுடன் உதவியாக பயணிக்கவே விரும்புகிறேன்.
என்னை போன்று சக சுற்றுலா பயணிகளும் இந்த நெரு்ககடியின் போது உதவ முன்வருமாறு கேட்டுக்கொள்கிறேன் என டோபி மேலும் தெரிவித்துள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
கிரீன்லாந்து விவகாரம்: 10% கூடுதல் வரி..! டிரம்பின் மிரட்டலுக்கு ஸ்டார்மர் கடும் எதிர்ப்பு News Lankasri
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri