இருளில் மூழ்கியுள்ள இலட்சக்கணக்கான வீடுகள்: அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
சீரற்ற வானிலை காரணமாக இதுவரை ஒரு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
பேரிடர் சூழ்நிலை காரணமாக ஏற்பட்ட மின்வெட்டு குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று (03) உரையாற்றும் போதே அமைச்சர் குமார ஜெயக்கொடி இவ்வாறு கூறியுள்ளார்.
பிரதான மின் விநியோக அமைப்பில் கடும் சேதம்
இதேவேளை, அனர்த்த சூழ்நிலையில் கடுமையாக சேதமடைந்த ரண்டம்பே, மஹியங்கனை, உக்குவெல, போவதென்ன, உக்குவெல மற்றும் ஹபரன ஆகிய இடங்களில் உள்ள பிரதான மின் விநியோக அமைப்புகளுக்கு பதிலாக தற்காலிக மின் கோபுரங்கள் அமைக்கப்படும் என்றும், இந்த மாதம் 10 ஆம் திகதிக்குள் அந்த பகுதி மக்களுக்கு மின்சாரம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மின் அமைப்பில் உள்ள பல பிரதான மின் விநியோக அமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளதால், அம்பாறை, மஹியங்கனை, வவுனியா மற்றும் பிற பகுதிகளில் உள்ள மக்களுக்கு மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டடுள்ளதாக கூறியுள்ளார்.
அதன்படி, தற்காலிக மின் கோபுரங்கள் மற்றும் மாற்று முறைகளைப் பயன்படுத்தி அந்த பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
அனர்த்த நிலைமை காரணமாக இதுவரை ஒரு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாகவும், இவற்றில் 62,448 மின் இணைப்புகள் தற்போது மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பேரிடர் சூழ்நிலை காரணமாக ஏற்பட்ட மின்வெட்டு குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் குமார ஜெயக்கொடி இவ்வாறு தெரிவித்தார்.