கிளிநொச்சியில் ஏற்பட்ட விபத்து - திருமணமாகி ஒரு வருடத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்
முறிகண்டிக்கும் - இரணைமடு சந்திக்கும் இடையில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த 25ஆம் திகதி ஏ9 வீதியில் இரவு 10.30 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பார ஊர்தியுடன் எதிராக பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (29.08.2023) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அனுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த செனவரட்ன எனவும் அவர் திருமணமாகி ஒரு வருடகாலம் என தெரிவிக்கப்படுகின்றது.
இறந்த பொலிஸ் உத்தியோகத்தர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் கீழ் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பாக மாங்குளம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 1 மணி நேரம் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri
