துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்தவர் மரணம்
துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த உணவக உரிமையாளரொருவர் உயிரிழந்தாக பொலிஸ் ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
காலி - அஹங்கம, மிதிகம பிரதேசத்தில் நேற்று (29.03.2023) குறித்த நபர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிய நிலையில் இன்று (30.03.2023) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மிதிகம பிரதேசத்தில் உணவகம் ஒன்றை நடத்தி வந்த சிந்து சந்தருவன் தொடம்கொடகே என்ற 31 வயதுடைய நபரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
துப்பாக்கிச்சூடு
சம்பவத்தில் பலத்த காயமடைந்த நிலையில் மாத்தறை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார்.
கார் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் இந்தத் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸாரின் சந்தேகம்
கடந்த 2021 ஆம் ஆண்டில், இந்த உணவக உரிமையாளரை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட போதிலும் அதில் அவரது சகோதரர் கொல்லப்பட்டார்.
இதேவேளை, பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ஹரக்கட்டா என அழைக்கப்படும் நதுன்
சிந்தக விக்கிரமரத்னவின் உதவியாளர்களால் இந்தத் துப்பாக்கிச்சூடு
மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பொலிஸாரால் சந்தேகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
