நாங்கள் மிகவும் நெருக்கடியான நிலையை எதிர்கொள்ளப் போகின்றோம்: முன்னாள் பிரதமர் ரணில்
திறமையற்ற கோட்டாபய அரசாங்கம் இலங்கையை பொருளாதார அரசியல் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் முழுமையான தோல்வியே மக்கள் நீண்ட வரிசைகளில் நிற்கவேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது அரசாங்கத்தின் காலத்தில் பொருளாதார நெருக்கடி ஒருபோதும் ஏற்படவில்லை. அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் வரிசைகளில் நிற்கவில்லை.
மக்கள் வீதியில் இறங்குவதற்கு ஏதாவது காரணமிருக்க வேண்டும், நாட்டின் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் திறமையின்மை காரணமாகவே இவை அனைத்தும் இடம்பெறுகின்றன என ரணில் விக்ரமசிங்க ஏ.என்.ஐக்கு தெரிவித்துள்ளார்.
ரணில் மேலும் கூறியதாவது, நான் பிரதமராகயிருந்தவேளை நாட்டின் பொருளாதாரம் திறமையான நிலையிலிருந்தது. இந்த அரசாங்கத்தின் திறமையின்மை மக்களை வீதிக்கு கொண்டுவந்துள்ளது.
அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை நாடினால் கூட பயனளிக்கக்கூடிய நிவாரணம் கிடைப்பதற்கு நீண்டகாலம் ஆகும். இந்தியா இலங்கைக்கு தன்னால் முடிந்தளவிற்கு உதவி வழங்கியுள்ளது.
இந்தியா நிதி தொடர்பற்ற விதத்தில் உதவிகளை வழங்கும் அதேவேளை, இந்தியாவின் ஆதரவின் விளைவுகள் எவ்வாறு உள்ளன என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.
இந்த அரசாங்கத்தின் கீழ் நாட்டிற்கு சீனாவிடமிருந்து முதலீடுகள் எதுவும் கிடைக்கவில்லை. பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக மாறியுள்ளது தற்போது இடம்பெறுவது நாட்டிற்கு பேரழிவு.
இரண்டு வருடங்களாக நாடு பொருளாதார விடயங்களை அலட்சியம் செய்தது. எங்கள் ஆட்சி முடிவிற்கு வந்தவேளை, கடன்களை செலுத்துவதற்கு பணமிருந்தது.
பொருளாதாரம் வீழ்ச்சியடைகின்றது நாட்டில் அரசாங்கம் இல்லை. கடந்த இரண்டு வாரங்களில் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட தீர்மானித்துள்ளது. ஆனால் இது நீண்டகாலம் நீடிக்கலாம். அதற்கு முன்னர் நாங்கள் வளங்கள் அற்ற நிலைக்கு தள்ளப்படுவோம். அரசாங்கத்தின் கையிருப்பில் போதியளவு நிதியிருப்பதாக தெரியவில்லை, தற்போது அரசாங்கம் கட்டணங்களை செலுத்துவதற்காக முன்னணி ஏற்றுமதி நிறுவனத்திடமிருந்து பணத்தை பெறுகின்றது.
மே மாதத்தின் இரண்டாவது வாரத்தில் எரிபொருள் கொள்வனவிற்கான இந்தியாவின் கடன் முடிவிற்குவரும். அதன் பின்னர் நாங்கள் மிகவும் நெருக்கடியான நிலையை எதிர்கொள்ளப்போகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.





நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவி ஷோவிற்கு வந்த தொகுப்பாளினி டிடி... கலகலப்பான நிகழ்ச்சி, வீடியோ இதோ Cineulagam

பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
