‘‘தமிழ் அரசியல் கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்திய சம்பவம்’’ (VIDEO)
தமிழ் மக்கள் பேரவையினால் இளைய தலைமுறையினருக்கு உள்ளுராட்சி தேர்தலும் போட்டியிட அனுமதி வழங்கப்படுவது தொடர்பில் அடிக்கடி பேசப்பட்ட போது இதற்கு தமிழ் தலைவர்களில் அன்றைய முன்னாள் முதலமைச்சராக இருந்த சீ.வி.விக்னேஸ்வரன் அந்த சந்தர்ப்பத்தை வலுவிழக்க செய்ய முனைப்பாக இருந்தார் என யாழ்.பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறை தலைவர் கலாநிதி.சி.ரகுராம் தெரிவித்துள்ளார்.
யாழில் இடம்பெற்ற சமகால அரசியல் உறையரங்கில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
சீ.வி.விக்னேஸ்வரனுக்கு அப்போது இருந்த நெருக்கடி கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனது அரசியல் பாதையை தனியான அமைத்துக்கொள்வதற்கு அவருக்கு இருந்த தயக்கம்,அச்சம் தமிழ் மக்கள் பேரவை வலுப்பெறுவதற்கான சந்தர்ப்பத்தை இல்லாதொழித்தது. இது வேதனையான விடயமாக காணப்பட்டது.
தமிழ் சிவில் சமூக கட்டமைப்பு என்பது எல்லைக்கு அப்பால் வளர்ச்சி பெறும் போது தங்களுடைய அரசியல் கட்டமைப்பு தலைமைத்துவத்தை பாதிக்கும் என தமிழ் அரசியல் தலைவர்கள் அச்சமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இன்றும் தமிழ் சிவில் சமூக அரசியல் கருத்தமர்வுகளை நடத்தும் போது அரசியல் கட்சிகள் அதனை அசூசையுடன் பார்க்கும் நிலையே ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.