சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை வலியுறுத்தி வடக்கில் பாரிய மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு
சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் பணிப்பாளர் ப.கருணாவதி வடக்கில் பாரிய மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இன்றைய தினம் கிளிநொச்சி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
இலங்கை அரசால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு குற்றங்கள்,மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள், போர் குற்றங்கள்,வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் சிறீலங்கா அரசை முழுமையான சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, மொண்டினீக்ரோ,மசிடோனியா,மாலாவி ஆகிய நாடுகளை உள்ளடக்கிய கோர்-குழு உறுப்பு நாடுகள் பருந்துரைக்க கோரியும்,கடந்தகால சம்பவங்களையும் ,நிகழ்காலத்தில் நடந்துகொண்டிருக்கும் நிலைமைகளையும் ஆராய்ந்தால் ஓர் உள்ளூர் பொறிமுறை மூலமாகவோ அல்லது கலப்புப் பொறிமுறை மூலமாகவோ இலங்கையில் பொறுப்புணர்வை உண்மையாக கையாள எந்த வித வாய்ப்பும் இல்லை என்பதை திட்டவட்டமாக சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல அனைவரும் அணி திரழ்வோம் என தெரிவித்துள்ளார்.
இம்மாபெரும் போராட்டத்திற்கு - மத குருக்கள்,பொது அமைப்புகள், வர்த்தக சங்கங்கள், சமூக அமைப்புக்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பல்கலைக்கழகமாணவர்கள், உள்ளிட்ட அனைத்து உறவுகளையும் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை வழங்கி வலுச்சேர்க்குமாறு வேண்டி நிக்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதற்கு அமைவாக எதிர்வரும் 1ம் திகதி திங்கட்கிழமை காலை 8.00 மணிக்கு குறித்த போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்பாக ஆரம்பமாகி பழைய வைத்தியசாலையை சென்றடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே தொடர்ச்சியான அறவழிப் போராட்டத்தில் ஈடுபடுவதன் மூலமே எமக்கான நீதியை பெற முடியும் எனவும் அவர் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்ட வங்கிகள்: முழுமையாக நிறுத்தப்பட்ட அரச ஊழியர் ஆட்சேர்ப்பு..! ஜனாதிபதியின் தகவல்
பல்வேறு உடல்நலப் பாதிப்புக்களால் அவதியுறும் ஷிரந்தி! நாட்டுக்கு சேவை செய்தவர்களின் இன்றைய கதி - புலம்பும் தயாசிறி