11ஆவது நாளாகவும் தொடரும் உணவு தவிர்ப்புப் போராட்டம்
இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கக்கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் 11ஆவது நாளாக இன்றும் இடம்பெற்றுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினர் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் என பலரும் கலந்து கொண்டு வடக்கு - கிழக்கு தாயக பகுதிகளில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை சுழற்சி முறையில் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடர் முடிவடையும் வரை தொடர்ச்சியாக போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
அரசியல்வாதிகள் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் இணைந்து கொள்வதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
