கொழும்பின் புறநகரிலுள்ள வீடுகளில் அதிகளவான கொவிட் தொற்றாளர்கள்
கொழும்பின் புறநகர் பகுதியான பாணந்துறை சுகாதார அதிகார பிரதேசத்தில் கொவிட் தொற்றுக்குள்ளாகிய பலர் வீடுகளில் இருப்பதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பல வீடுகளில் கொவிட் தொற்றாளர்கள் இருப்பதாக எந்தவொரு அறிவித்தலும் அவர்களின் வீடுகளின் முன்னால் காட்சிப்படுத்தப்படவில்லை.
இந்த நிலைமை பிரதேச மக்களின் பாதுகாப்பிற்கு பாரிய அச்சுத்தலாகும் என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட சுகாதார சேவை ஊழியர்கள் முன்னெடுத்த பணி பகிஷ்கரிப்பு நிறைவடைந்து சில நாட்களாகியுள்ளது.
இருந்த போதிலும் பாணந்துறை சுகாதார அதிகார பிரதேசத்தில் கொவிட் தொற்றாளர்கள் இருக்கும் வீடுகளில் பொது சுகாதார பரிசோதகர்கள் வருகைத்தரவில்லை என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் கொவிட் தொற்றாளர்கள் இருக்கும் வீடுகளில் உள்ள மக்கள் பொது இடங்களில் சுற்றி திரிவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri
