பிரியந்த படுகொலையில் மறைந்திருக்கும் பின்னணி! முன்னாள் புலனாய்வுத் தலைவர் எச்சரிக்கை
பாகிஸ்தானில் கொடூரமாக தாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட இலங்கைப் பொறியியலாளர் தொடர்பில் உளவுத் துறையினர் உன்னிப்பாக விசாரணை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் மொஹமட் ஹபீஸ் மாஷா இதனை தெரிவித்துள்ளார். இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தீவிரவாதத் தாக்குதலை விட இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலாக இருந்திருக்கலாம் என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
இனக்கலவரங்களை உருவாக்கி நாட்டில் ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதற்காக அவ்வாறு செய்திருக்கலாம் எனவும், இலங்கை தீவிரவாத தாக்குதல்களுக்கு உள்ளாகும் அபாயத்தில் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan