ஹரக் கட்டா விவகாரம்: மீட்பதற்கு திட்டமிட்ட இராணுவ சிப்பாய் கைது
குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ஹரக் கட்டா எனப்படும் நதுன் சிந்தகவை மீட்பதற்காக திட்டமிட்டதாக கூறப்படும் முன்னாள் இராணுவ சிப்பாயை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபரை தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் திட்டம்
இந்நிலையில் கொமாண்டோ சீருடையுடன் குழுவொன்று, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குள் நுழைந்து பிரதான நுழைவாயில் ஊடாக பாதுகாப்புப் படையினர் அனைவரையும் தாக்கிவிட்டு தப்பிச் செல்வதற்கு திட்டமிட்டிருந்தது.
இந்த திட்டம் தொடர்பான தகவல் வெளியானதையடுத்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பிரதான சந்தேகநபர்களாக கைது செய்யப்பட்டுள்ள இரண்டு முன்னாள் இாரணுவ கொமாண்டோ படையினர் குறித்த ஒப்பந்தத்திற்காக 100 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை பெற்றுள்ளதாகவம் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 2 மணி நேரம் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
