புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்திய குழுவினர் கைது
புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்திய 6 பேர் கொண்ட மற்றொரு மாணவ குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள வள்ளிபுனம் மகாவித்தியாலயத்தில் பாடசாலை முடித்து வெளியேறிய மாணவர்கள் மீது வெளியில் இருந்து வந்த மாணவ குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த சம்பவம் இன்று (25.07.2024) மாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
புதுக்குடியிருப்பு பொலிஸார்
புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியினை சேர்ந்த இரண்டு மற்றும் வள்ளிபுனம் மகாவித்தியாலய மாணவர்கள் நால்வர் உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழு பாடசாலை விட்டு திரும்பிய மூன்று மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.
பாடசாலை நுழைவாயிலில் பாடசாலை முடிந்து வெளியேறிய சாதாரணதர மாணவர்கள் மீது வெளியில் இருந்து வந்த உயர்தர மாணவர்கள் குழுவினரே இந்த தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தினை தொடர்ந்து, குறித்த பகுதியில் பெற்றோர்கள் ஒன்றுகூடியுள்ளதுடன் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த புதுக்குடியிருப்பு பொலிஸார், தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களை அழைத்து சென்று தாக்குதல் நடத்திய மாணவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களை உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுவந்து ஒப்படைக்குமாறு பெற்றொர்களுக்கு அறிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
மேற்கொண்டு விசாரணைகளை முன்னெடுத்த புதுக்குடியிருப்பு பொலிஸார், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 6 மாணவர்களையும் கைதுசெய்து தடுத்துவைத்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையினை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 5 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
