இவர்களை கண்டுபிடித்து கொடுத்தால் மிகப்பெரிய பணப்பரிசு
பாணந்துறை மருத்துவமனைக்கு முன்னால் அம்பியுலன்ஸ் சாரதியை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு மேற்கொண்ட சந்தேக நபர்களின் புகைப்படங்களை பொலிஸார் இன்று ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.
இந்த சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்வதற்கு பொது மக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.
அதற்கமைய சந்தேக நபர்கள் இருவர் தொடர்பில் சரியான தகவல்கள் வழங்கும் நபர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பணப்பரிசு வழங்குவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்த சந்தேக நபர்கள் இருவர் தொடர்பில் தகவல் கிடைத்தால் தங்களுக்கு உடனடியாக அறிவிக்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் கேட்டுள்ளனர்.
அழைக்க வேண்டிய இலக்கம் மேல் மாகாண குற்றத்தடுப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் - 071-8592686 களுத்துறை குற்றப்பிரிவு பணிப்பாளர் - 071-8592745
