அரசாங்கம் மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் கம்மன்பில!
எந்தவொரு அரசாங்கமும் ஆட்சியை அமைத்து இரண்டே மாதத்தில் ஊடகங்களை அச்சுறுத்திய வரலாறு இல்லை எனவும், ஆனால் தற்போது புதிய அரசாங்கம் ஊடகங்களை அச்சுறுத்துகிறது என்றும் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று(05.11.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
அரச ஊடகங்கள்
“தனியார் ஊடகம் ஒன்றுக்கு ஜனாதிபதி தனது பெயரைக் கூறி அச்சுறுத்துவதான செய்திகள் வெளியாகியிருந்தன.
சந்திரிகா காலத்திலும், சிறிசேன காலத்திலும், கோட்டாபாய காலத்திலும், ரணில் விக்ரமசிங்க காலத்திலும் நாம் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த போதும் அரச ஊடகங்கள் கூட எங்களை கருத்துக்களை அனுமதித்தன.
இப்போது அரச ஊடகங்களில் எதையும் ஒளிபரப்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதாக சில தகவல்களும் வெளியாகியுள்ளன.
பெரும்பான்மையினரின் கருத்து
அரச ஊடகங்கள் மற்றும் தனியார் ஊடகங்களை அடக்கி அரசாங்கம் விரும்புவதை மாத்திரம் ஒளிபரப்புமாறு ஜனாதிபதி சுட்டிக்காட்டியிதாக சில கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
மேலும் இந்த நாட்டின் 50 சதவீதத்துக்கும் அதிக மக்கள் ஜனாதிபதிக்கு எதிராக வாக்களித்துள்ளனர். பெரும்பான்மையினரின் கருத்துக்கு ஊடகங்களில் மூலம் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |